சில   ஊடகங்கள் எனது வீடியோவை
எடிட் செய்து வெளியிடுகின்றன.

டாக்டர் ஜாகிர் நாயக் குற்றச்சாட்டு



தன்னுடைய வீடியோ பதிவுகளை திருத்தி வெளியிட்டதாக ஊடங்கள் மீது  டாக்டர் ஜாகிர் நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைதி டிவி அனுமதி இல்லாமல் ஒலிபரப்பபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,”எங்கள் மீது தடை இல்லை. பதிவிறக்கம் செய்வதற்கு நாங்கள் அனுமதி பெறவில்லைஎன்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறியிருப்பதாவது:-
2008-ம் ஆண்டு மற்றும் மீண்டும் 2012-ல் அனுமதி கோரி விண்ணப்பித்தோம். பாதுகாப்பு காரணம் கூறி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அனுமதி வழங்கவில்லை.
இஸ்லாமிய சேனலாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. சில   ஊடகங்கள் எனது வீடியோவை எடிட் செய்து வெளியிடுகின்றன.
இந்த ஆண்டு இந்தியா திரும்பும் திட்டமில்லை. எந்த தீவிரவாத இயக்கத்தாலும் நான் ஈர்க்கப்படவில்லை. ஒருபோது எந்தவொரு தீவிரவாத தாக்குதலையும் நான் ஆதரிக்கவில்லை.
இஸ்லாமை பொறுத்த வரை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது பாவம். இஸ்லாம்  கொலை செய்வதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.”
இவ்வாறு டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஜாகிர் நாயக் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்கா  சென்றுள்ள டாக்டர் ஜாகிர் நாயக் விரைவில் மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய வீடியோ பதிவுகளை திருத்தி வெளியிட்டதாக ஊடங்கள் மீது மத போதகர் ஜாகிர் நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top