புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உறுதி
துருக்கி ஜனாதிபதி எர்டோகன்
குற்றம் சாட்டு
துருக்கி
ராணுவ புரட்சிக்கு
மதகுரு பெதுல்லா
குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலருமே காரணம்
என துருக்கி
ஜனாதிபதி அர்தூகான்
குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியில்
புரட்சி செய்து
ஆட்சியை கைபற்றியதாக
ராணுவம் அறிவித்தது.
இதனையடுத்து மக்கள் வீதிக்கு வந்து போராட
வேண்டும் என
துருக்கி ஜனாதிபதி அர்தூகான் மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மக்கள் ராணுவத்திற்கு
எதிராக ராணுவ
டாங்குகளை முன்னேற
விடாமல் போராட்டம்
நடத்தினர். ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஜனாதிபதி எர்டோகனுக்கு
ஆதரவாக டாக்சிம்
சதுக்கத்தில் பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இந்நிலையில்
இஸ்தான்புல்லின் அட்டதுர்க் விமான நிலையம் வந்திறங்கிய
துருக்கி ஜனாதிபதி
எர்டோகன் கூறியதாவது:
துருக்கியில்
எற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா
குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலரும் தான்
காரணம். அவர்களுக்கு
விரைவில் தண்டனை
கிடைக்கும். துருக்கி நாட்டின் நேர்மை மற்றும்
ஒற்றுமையை குறிவைத்து
நடத்தப்பட்ட இத்தாக்குதல் தேச துரோகம். ராணுவ
தளபதி எங்கிருக்கிறார்
எனத் தெரியவில்லை.
புரட்சியில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment