பூங்காவில் குண்டுவெடித்து வாலிபரின் கால் துண்டானது

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பூங்காவில் பாறைமீது ஏற முயன்ற வாலிபரின் கால் குண்டுவெடிப்பில் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா நகரை சேர்ந்த கன்னோர் கோல்டன்(19) என்ற கல்லூரி மாணவர் வாஷிங்டன் நகரில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நியூயார்க் நகரை சுற்றிப்பார்க்க வந்தார்.
(உள்ளூர் நேரப்படி) இன்றுகாலை சுமார் 11 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் பூங்காவின் அழகை ரசித்தபடி அங்கிருந்த சிறிய பாறையின்மீது ஏறி, இயற்கை காட்சிகளை பார்க்க முயன்றபோது. திடீரென்று அந்த பாறைக்கு அடியில் இருந்த சிறியரக குண்டு வெடித்து சிதறியது.
இச்சம்பவத்தில் அவருடன் இருந்த ஒரு நண்பர் ஆறடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். கன்னோர் கோல்டனின் இடதுகால் முழங்காலுக்கு கீழே துண்டாகிப்போய் தூர விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீஸ் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.
மோப்ப நாய்களின் உதவியுடன் பூங்கா முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் அங்கு வேறெந்த வெடிப்பொருளும் கிடைக்கவில்லை. ஒருகாலை இழந்த நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னோர் கோல்டனின் உடல்நிலை தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top