பிரதமர்
பதவியிலிருந்து விடைபெற்றார் கேமரூன்
பிரிட்டன்
பிரதமர் டேவிட்
கேமரூன் பதவி
விலகுவதைத் தொடர்ந்து, சக அமைச்சர்கள், சோகத்துடன்
அவரை வழியனுப்பி
வைத்தனர்.
'ஐரோப்பிய
யூனியனில் இருந்து
வெளியேறக் கூடாது'
என்ற பிரிட்டன்
பிரதமர் டேவிட்
கேமரூனின் கோரிக்கையை,
அந்த நாட்டின்
பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, பிரதமர்
பதவியிலிருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார்.
பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரசா மே,
இன்று பதவியேற்க
உள்ளார்.
இந்நிலையில்,
பிரதமர் கேமரூன்
தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் நேற்று
நடந்தது. அப்போது,
அமைச்சரவையில் இருந்த அவரது சகாக்கள், சோகத்துடன்
காணப்பட்டனர். கேமரூன் தலைமையிலான ஆலோசனை கூட்டம்,
மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக
அமைந்ததாக, கலாசாரத் துறை செயலர் ஜான்
விட்டிங் டேல்
தெரிவித்ட்ஹூள்ளார்.
அவர்
கூறியுள்ளாதாவது
: இந்த கூட்டம்,
மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக
இருந்ததோடு, அந்த இடமே சோகத்தால் நிரம்பியிருந்தது.
பிரிட்டன் அரசு,
அடுத்ததாக மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment