இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில்
நேருக்கு நேர் மோதி விபத்து
பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்களும் நான்கு பெட்டிகளை கொண்டது. வேகமாக மோதியதால் இரண்டு ரயில்களிலும் உள்ள முன் பெட்டிகள் சுக்கு நூறாக சிதைந்தது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கவலையளிக்கும் விடயமாக உள்ளது என இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top