இனி எனக்கு வேலை இல்லை: கேமரூன் கடைசி பேச்சு
பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து

குடும்பத்துடன் வெளியேறினார்.

பிரிட்டன் பிரதமர் பதவி வகித்தது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என பதவி விலகிய டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று நடந்த பொது வாக்கெடுப்பில், பெருபான்மை மக்கள் விலகுவதுஎன வாக்களித்தனர். இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து , தெரசா மே அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டேவிட் கேமரூன் தான் வகித்த  பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரிட்டன் ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டார். முன்னதாக கடைசி நிகழ்ச்சியாக பிரிட்டன் பார்லி.யில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்:
பிரதமர் பதவி வகித்தது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கெளரவம், இனி எனக்கு அந்த வேலை இல்லை. பிரி்ட்டன் ஐரோப்பியன் யூனியனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற எம்.பி.,க்கள் கூச்சல்களை நான் கேட்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்.   

இதனைத்தொடர்ந்து இருந்து பிரதமர் அலுவலக இல்லத்தில் டேவிட் கேமரூன் குடும்த்துடன் வெளியேறினார். அப்போது தான் செல்லமாக வளர்த்து வந்த லோரி என்ற பூனையை மட்டும் அலுவலகத்தில் விட்டு சென்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top