நடிகர் கமல்ஹாசன்
மருத்துவமனையில் அனுமதி
நடிகர்
கமல்ஹாசன் உடல்
நலக் குறைவு
காரணமாக சென்னை
ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு
வருவதாக அறிவிக்கப்படுகிறது.
ஆழ்வார்பேட்டையில்
உள்ள தனது
வீட்டில் மாடிப்படியிலிருந்து
தவறி விழுந்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நடிகர்
கமலஹாசன் சென்னை
அப்பலோ மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவருகிறார்.
கமல் அமெரிக்காவில்
சபாஷ் நாயுடு
திரைப்படத்தை முடித்து கொண்டு கடந்த வாரம்
தான் சென்னை
திரும்பினார். இந்நிலையில் இன்று காலை சென்னை
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள மாடிப்படியில் இறங்கும்
போது தவறி
விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து
உடனடியாக மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்
காலிலும், முதுகுதண்டிலும்
காயம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்தனர். சிறிய அளவிலான அறுவை செய்ய
வேண்டும் என
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து
அறுவை சிகிச்சை
முடிந்த பின்
கமலுக்கு மருத்துவர்கள்
சில அறிவுரைகள்
வழங்கினர். அதாவது பூரண குணமடைய சில
வாரம் ஆகும்
என்றும், நன்றாக
ஓய்வு எடுக்கும்
படியும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment