சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே
ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்
சவூதி அரேபியா நாட்டின் கடற்கரை நகரமான ஜித்தாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஐ.எஸ். தற்கொலைப்படையை
சேர்ந்த தீவிரவாதி இன்று அதிகாலை நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் இரு பொலிஸார்
காயமடைந்தனர், தாக்குதல் நடத்திய தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானதாகவும்
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் மசூதி அருகே இன்று அதிகாலை தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று அதிகாலை ஜித்தாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக சவூதி அரேபியா அரசு வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு ஜித்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பதுபேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment