மட்டக்களப்பு உள்ளுர் விமானப் போக்குவரத்து சேவை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பு
விமான நிலையத்தில்
317 கோடி ரூபாய்
செலவில் உள்ளுர்
விமானப் போக்குவரத்து
சேவையை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று 10 ஆம் திகதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
சிவில்
விமானப் போக்கு
வரத்து சேவையை
மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள்
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில்
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு
மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு
உள்ளுர் விமானப்
போக்குவரத்து இன்றியமையாதது என கிழக்கு மாகாண
முதலமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம்
வலியுறுத்தியமைக்கு அமைவாக இந்த
விமானப் போக்குவரத்து
சேவைகள் துரிதமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1958ம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையம், 1983ஆம் ஆண்டு மார்ச் 27ம் திகதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்வில் கிழக்கு
மாகாண முதலமைச்சர்
செய்னுலாப்தீன் நஸீர்அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,
பிரதிமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர்,
பிரதித் தவிசாளர்,
ஏயார் மார்ஷல்
ஜீ.பி.
புளத்சிங்ஹல, உட்பட இன்னும்பல அதிகாரிகளும் கலந்து
கொண்டிருந்தனர்.









0 comments:
Post a Comment