ஜாகிர் நாயக் பேச்சை ஒளிபரப்ப வங்கதேச அரசு தடை!


மும்பையில் உள்ள இஸ்லாம் மத பிச்சாரகர் ஜாகிர் நாயக்அவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.
 டாக்காவில்  உள்ள உணவகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக் பேச்சு தங்களை கவர்ந்ததாக கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் நாயக்கின் பீஸ் டி.வி., ஒளிப்பரப்பிற்கு வங்கதேச அரசு இன்று தடை விதித்ததுஜாகீர் நாயக். இவர் பீஸ் டி.வி., எனும் பெயரில் டி.வி., சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சேனல் சர்வதேச அளவில் ஒளிப்பரப்பாகிறது
இந்நிலையில் வங்கதேச அமைச்சரவை கூட்டம் அந்நாட்டு தொழில் துறை அமைச்சர் ஆமீர் ஹூசைன் அமு தலைமையில் இன்று நடந்தது. இதில் அந்நாட்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் ஜாகீரின்பீஸ் டி.வி., பங்களா சேனலின் ஒளிப்பரப்பை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள அவாமி லீக் தலைவர்கள் ஜாகிர் நாயக் டிவிக்கு பணம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த டிவிக்கு, தொண்டு நிறுவனம் சார்பில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொலைக் காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top