துருக்கி அரசிடம்
ராணுவம் சரண்
அரசை கைப்பற்றும் முயற்சி படுதோல்வியில் முடிவு
துருக்கி
அரசை கைப்பற்ற
நள்ளிரவில் அந்நாட்டு ராணுவம் நடத்திய சதி
தாக்குதல்களை ஜனாதிபதி ஆதரவு படையினர் முறியடித்துள்ளனர்.
துருக்கி
ராணுவத்தின் தலைமை ராணுவ தளபதியான ஹுலுசி
அக்கார் என்பவரை
ராணுவத்தில் உள்ள கலகக்காரர்கள் நள்ளிரவில் சிறை
பிடித்தனர்.
பின்னர்,
அரசாங்கம் தங்கது
கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவித்த கலகக்காரர்கள் அரசை
கைப்பற்ற அங்கார
நகரின் பல
இடங்களில் தாக்குதல்களை
நிகழ்த்தியுள்ளனர்.
அரசை
கைப்பற்றும் முயற்சி ஜனாதிபதியான எரோடகனிற்கு தெரியப்படுத்தியதும்,
அவர் தனது
விசுவாச படைகளுக்கு
அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
‘அரசை
கைப்பற்ற முயலும்
இந்த நடவடிக்கை
ஒரு தேச
விரோத செயலாகும்.
இதில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு
கடுமையான தண்டனை
வழங்கப்படும்’ என அறிவித்தார்.
ஜனாதிபதியின்
உத்தரவை தொடர்ந்து
கலகக்காரர்களிடம் இருந்த ராணுவ தளபதி பத்திரமாக
மீட்கப்பட்டார். துரோக செயலில் ஈடுப்பட்ட ராணுவத்தினர்
அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.
மேலும்,
சதியில் ஈடுப்பட்ட
சுமார்90பேர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் சுமார்
1,500 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டை
பெரும் பரபரப்பாக்கிய
இச்சம்வத்தை தொடர்ந்து அரசை கைப்பற்றும் முயற்சி
படுதோல்வியில் முடிந்துள்ளது.
0 comments:
Post a Comment