அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அவர்களின்
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கையிலும், உலக நாடுகளிலும் சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் முகங்கொடுத்துபல்வேறு இன்னல்களுக்குமத்தியில் “ஈதுல் பித்ர்”பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுகுவதற்குரிய ஆன்மீக பலத்தை எல்லாம்வல்ல அல்லாஹ் அருளவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் அந்தச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இறையச்சம்,சகிப்புத் தன்மை, ஈகை, புலனடக்கம், பரோபகாரம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் போன்றஉயர் பண்புகளைபுனிதரமழான் நோன்புகாலம் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் ஆண்டுதோறும் ஏற்படுத்துகின்றது.
முஸ்லிம்கள்; நோன்புநோற்று,ஏனைய சன்மார்க்கவணக்கங்களில் ஊறித் திளைத்திருந்தபுனிதரமழான் மாதம் விடைபெற்றுச்செல்லும் பொழுது, ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறைதென்பட்டதும் “ஈதுல் பித்ர்”பெருநாள்கொண்டாடப்படுகின்றது.
இலங்கையைபொறுத்த வரை பொதுவாக சிறுபான்மை மக்கள் மீதும் குறிப்பாக முஸ்லிம்கள் மீதும் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த அட்டூழியங்கள்,அநியாயங்கள் என்பன இனிமேல் முற்றாக ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவரும்முஸ்லிம்களுக்குதீய இனவாதசக்திகளின்அண்மைக் காலச்செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளபோதிலும்,நல்லாட்சிஅரசாங்கம் அதற்கு இடமளிக்கமாட்டாதுஎனநாம் திடமாகநம்புகின்றோம்.
அத்துடன்,அண்மையில் ஏற்பட்டமண்சரிவு,வெள்ளப் பெருக்குஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளானமக்களும்,வடக்கிலும் கிழக்கிலும் இருந்துவெளியேற்றப்பட்டுஅகதிகளாகவாழ்ந்துவரும் மக்களும்,முன்னர் சுனாமிபோன்றஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் துயரங்களுக்குமத்தியில் இன்னுமொரு“ஈதுல் பித்ர்”பெருநாளைசந்திக்கும் இவ்வேளையில் அவர்களதுவாழ்விலும் சுபீட்சமும்,விமோசனமும் ஏற்படுவதற்குஎங்களால் இயன்றஅனைத்துபங்களிப்புக்களையும் நல்குவதற்குதிடசங்கற்பம் பூணுவோமாக!
இவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment