பிரிட்டன் பிரதமர் தெரிவு
முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரசா மே முதலிடம்
ஐரோப்பிய
யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்த நாட்டின்
பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து பதவி விலகும் டேவிட் கேமரூனுக்கு
பதிலாக புதிய
பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான
ஆளும் கன்சர்வேடிவ்
கட்சி எம்.பி.க்களின்
முதல் கட்ட
வாக்குப் பதிவு
செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இவ்வாக்கெடுப்பில் உள்துறை
அமைச்சர் தெரசா
மே Theresa
May முதலிடம் பிடித்தார்.
அவருக்கு
அடுத்தபடியாக எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா
லீட்ஸம், நீதித்
துறை அமைச்சர்
மைக்கேல் கோவ்
ஆகியோர் அதிக
வாக்குகளைப் பெற்றனர்.
இதையடுத்து
கடைசி இடத்தைப்
பிடித்த பணியாளர்
நலத் துறை
அமைச்சர் ஸ்டீஃபன்
கிராப் போட்டியிலிருந்து
விலக்கப்பட்டார்.
மூன்று
கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்கெடுப்பில், கன்சர்வேடிவ்
கட்சியின் 330 எம்.பி.க்கள் இரு
இறுதி வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுப்பார்கள்.
0 comments:
Post a Comment