தேசிய
சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
முஹம்மத் முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு
அரச
வாகனம் ஒன்றை
முறைகேடான முறையில்
பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய
சுதந்திர முன்னணியின்
ஊடகப் பேச்சாளர்
முஹம்மத் முஸம்மில்
எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு
கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரது விளக்கமறியலை எதிர்வரும்
13 ஆம் திகதி
வரை நீடித்து
நீதவான் லங்கா
ஜயரத்ன உத்தரவிட்டார்.
ஜனாதிபதி
செயலகத்தின் வாகனம் ஒன்றை பெற்று அதனை
அரச பொறியியல்
கூட்டுத்தாபனத்திற்கு வாடகைக்கு விட்டு
மாதம் ஒரு
லட்சம் ரூபாவுக்கும்
மேலான பணத்தை
தனது மனைவியின்
வங்கி கணக்கில்
வைப்புச் செய்ததாக
முஹம்மட் முஸம்மில்
மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் தனியாக அந்த வாகனத்திற்கு வாடகை செலுத்தி வந்த நிலையில், அரச நிறுவனம் ஒன்றுக்கே அந்த வாகனத்தை வாடகைக்கு விட்டு முஹம்மட் முஸம்மில் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது
0 comments:
Post a Comment