(Talent) நிகழ்வுக்கு
விண்ணப்பம் கோரல்
(எம்.எஸ்.எம்.சாஹிர்)
தேசிய
கொள்கை மற்றும்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
மற்றும் தேசிய
இளைஞர்
சேவைகள் மன்றம்
ஆகியன இனணந்து
நடாத்தும் தேசிய
வேலைத்திட்டம் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டபிள்யு.ஜீ.எஸ்.எரந்திகவின் தலைமையில்,
யூத் கொட்
டலன்ட் (Youth
got talent) என்ற செயத்திட்டம் நாடு
பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளது.
மற்றவரால்
செய்ய முடியாத
வித்தியாசமான செயற்பாடு (Talent), 13-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளாகிய உங்களிடம்
இருக்குமானால், உடனே உங்களுடைய பிரதேச இளைஞர்
சேவைகள் அதிகாரியை
தொடர்பு கொண்டு
அங்கே விண்ணப்பப்படிவத்தைப்
பெற்று பூரணப்படுத்தி
எதிர்வரும் 27.07.2016ஆம்
திகதிக்கு முன் கிடைக்கக்
கூடியதாக ஒப்படைக்குமாறும்
இளைஞர், யுவதிகள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும்
இளைஞர், யுவதிகள்
உங்கள் ஊருக்குத்
தேவையான பெறுமதியான
(project)
ஒன்றைத் தயார்படுத்தி
எதிர்வரும் 27.07.2016 ஆம் திகதிக்கு
முன் உங்கள்
பிரதேச செயலகத்திலுள்ள
இளைஞர் சேவை
அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் அதில் தெரிவு செய்யப்படும்
சிறந்த (project) க்கு பெறுமதியான
பணப் பரிசில்களும்
வழங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக
விபரங்களைப் பெற உங்கள் பிரதேச இளைஞர்
சேவை அதிகாரியைத்
தொடர்பு கொள்ளுமாறும்
இளைஞர், யுவதிகள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
(Talent) திறமையை வெளிக்காட்டும்
நிகழ்வு, கல்லடி
பாலத்திற்கு அருகில் 2016.08.06ம் திகதி நடைபெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனவும்
065-2224367, 077-787 4472 என்ற தொலைபேசி இலங்கங்களுடன்
தொடர்பு கொண்டு
மட்டக்களப்பு மாவட்ட
இளைஞர், யுவதிகள்
மேலதிக தகவல்களைப்
பெறலாம் எனவும்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக இளைஞர்
சேவை அதிகாரி
பீ.எம்.றியாத் எமக்குத்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment