ஜனாதிபதிக்கும் பங்களாதேஷ் பிரதமருக்குமிடையில்
உத்தியோகபூர்வ சந்திப்பு
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
மற்றும் பங்களாதேஷ்
பிரதமர் ஷேக்
ஹசீனா அம்மையார்
ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
இன்று நண்பகல்
டாக்கா நகரில்
இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ்
பிரதமர் ஷேக்
ஹசீனா அம்மையாரின்
அழைப்பின் பேரில்
பங்களாதேஷிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று
காலை பங்களாதேஷ்
பிரதமரின் அலுவலகத்திற்குச்
விஐயம் செய்தார்.
அங்கு
பங்களாதேஷ் பிரதமரினால்
ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
இரண்டு
நாட்டுத் தலைவர்களுக்கிடையில்
இடம்பெற்ற நட்பு
ரீதியிலான சந்திப்பையடுத்து
இரு தரப்பு
பேச்சுவார்ததை ஆரம்பமானது.
பங்களாதேஷ்
மற்றும் இலங்கைக்கிடையில்
வர்த்தக உடன்படிக்கையை
ஏற்படுத்துதல் மற்றும் விசேட பொருளாதார வலயத்தை
ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள்
விசேட கவனம்
செலுத்தினர்.
0 comments:
Post a Comment