பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (14) பிற்பகல் டாக்கா நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பங்களாதேஷ் ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை பங்களாதேஷ் ஜனாதிபதி அவர்கள் அன்புடன் வரவேற்றார். ஜனாதிபதிகளுக்கிடையிலான சினேகபூர்வ உரையாடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top