முஸ்லிம்களின்
குடியேற்ற நடவடிக்கைக்கு எதிரான
பேரணியில்
குழப்பம்
முஸ்லிம்களின் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட
பேரணியில் முறுகல் நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு
– முள்ளியவளையில் முஸ்லிம்களின் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த
பேரணி இன்று
முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு - முள்ளியவளை, ஆலடிச்சந்தியில்
இருந்து கூழாமுறிப்பு
வரை நடத்தப்பட்டுள்ளது.
பேரணியில்
கலந்து கொண்ட
யாழ்ப்பாணத்தைச் சேரந்த சட்டத்தரணியொருவரால்
குறித்த பேரணியின்
போது வடமாகாண
முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபைக்கு எதிராக
முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பேரணியில்
கலந்து கொண்டவர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அங்கு
முறுகல் நிலை
ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment