பிரேஸில் நாட்டு பிரஜையின் வயிற்றில்
1 கோடியே 13 இலட்சம்  பெறுமதிமிக்க கொகெய்ன்

சட்டவிரோதமாக பிரேஸிலில் இருந்து இலங்கைக்கு, உடலில் மறைத்து கொண்டு வரப்பட்ட கொக்கேன் போதைப் பொருள் மருந்து வில்லைகள் 58 உடன், பிரேஸில் நாட்டு பிரஜை ஒருவர்) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 1 கோடியே 13 இலட்சம்  பெறுமதிமிக்க கொக்கேன் மருந்து வில்லைகளை, உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளதோடு, இந்நபர் தொடர்பில் ஏற்கனவே கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்நபரைமருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய பின்னர், அவரது உடலிலிருந்து குறித்த மருந்து வில்லைகள் எடுக்கப்பட்டுள்ளன.
58 கொக்கேன் மருந்து வில்லைகளை இவர் இவ்வாறு விழுங்கியவாறு இலங்கைக்கு வருகை தந்தபோதே கைது செய்யப்பட்டார்.,
மேலும், குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர், சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top