கல்முனை – சம்மாந்துறை நகர அபிவிருத்தித் திட்டம்
மேலதிக இணைப்பு பாதைகள்
15KM தூரம் வரையான பாதை = 200 பில்லியன் ரூபா
கல்முனை
– சம்மாந்துறை ஒருங்கிணைக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தின்
கல்முனை தொடக்கம்
பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதைகளை
அமைப்பது தொடர்பான
உயர்மட்டக் கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
தலைமையில் நேற்று (04) (2018-07-04) அமைச்சின் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கு
இந்தியா அரசாங்கம்
200 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்கியுள்ளது. 15KM தூரம் வரையான இந்த இணைப்புப்
பாதை 2020 இல்
பூர்த்தி செய்யவும்
திட்டமிடப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில்
பிரதியமைச்சர்களான பைசால் காசிம்,
எச்.எம்.எம்.ஹரீஸ்,
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின்
செயலாளர், மேலதிகச்
செயலாளர், கல்முனை
மாநகர சபை
உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத்
மன்சூர், வீதி
அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மற்றும்
தேசிய நீர்
வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் என பலர்
பங்குபற்றினர்.
************************************************************************
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தின் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதைகளை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கு இந்தியா அரசாங்கம் 200 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்கியுள்ளது. 15KM தூரம் வரையான இந்த இணைப்புப் பாதை 2020 இல் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் என பலர் பங்குபற்றினர்.
****************************************************************************
இக் கூட்டம் (2018-07-04) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. |
இதேவேளை, ஒரு வருடமும் 5 மாதங்களுக்கு முன்
கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிக்கான
அபிவிருத்திகளை துரிதப்படுத்தும் கலந்துரையாடல்
கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல்பணிகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இன்று 23 ஆம் திகதி(2017-01-23) திங்கட்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் இக்கூட்டம்
இடம்பெற்றது. இக்கூட்டத்தின்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலைமேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கல்முனை மற்றும் சம்மாந்துறைஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டங்களை மேல் மாகாண மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டங்களை ஆராய்வதற்கு அரசாங்க அதிபர் அல்லது அவரது பிரதிநிதி, உள்ளுராட்சிஉதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அடங்கியகுழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பாரிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்ளடங்கும்முக்கியமான அணைக்கட்டு பாதையை செப்பனிட்டு நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்கனவே அங்கீகாரமளிக்கப்பட்ட மாவடிப்பள்ளி - துறைநீலாவணைவரையான வீதியை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்ஒரு வழிப்பாதையாக அமைக்கப்படும் இவ்வீதி கரைவாகு வட்டை, இறைவெளி கண்டம் ஊடாகநற்பிட்டிமுனை தமிழ் பகுதியை ஊடறுத்து துரைவேந்திர மேடு ஊடாக பெரிய நீலாவணையைவந்தடையும்.
அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கும் பிரதேசத்தில் புகையிர பாதை அமைக்கப்படும் பட்சத்தில், அதனையும்கருத்திற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக 800 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை சுவீகரிக்கவேண்டியுள்ளது. இதன்முதற்கட்டமாக 200 ஏக்கர் காணிகளை தற்போது சுவீகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த காணிசுவீகரிப்பின்போது ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்காக கமநல சேவை அதிகாரிகள், உள்ளுராட்சிஉதவி ஆணையாளர், பிரதேச செயலளார்கள், நில அளவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்கியஅதிகாரிகள் குழுவொன்றை அமைப்பதற்கும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் பெரிய நீலாவணை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதியை செப்பனிடுவதற்கும், கடற்கரை பிரதேசத்தில் பீச் பார்க் அமைப்பதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தற்போதுநடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்துக்கு 45 மில்லியன் ரூபாசெலவில் 500 மீற்றர் வரை கருங்கல் சல்லடை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சியுள்ளவேலைகளை இயன்றவரை துரிதமாக பூர்த்திசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், காணி மீள்நிரப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள்உள்ளடங்கி குழுவொன்று குறித்த பிரதேசங்களில் ஒரு வாரத்துக்குள் விஜயம் செய்து நிலைமையை நேரில்பார்வையிட்டு அறிக்கையொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்), ஐ.எல்.எம். மாஹிர், கல்முனை மாநகரமுன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உமர்அலி, ஏ.எல்.எம். முஸ்தபா, முஹம்மத் பிர்தௌஸ்,அமைச்சரின் இணைப்புச்செயலாளரும் சிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், மு.கா. அம்பாறைமாவட்ட பொருளாளர் ஏ.சி. யஹியாகான், அமைச்சின் செயலாளர் என்.டி. ஹெட்டியாராச்சி, மேலதிகசெயலாளர் எம். முயினுத்தீன், மேல் மாகாண, பெருநகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி மீள்நிரப்புஅபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2017-01-23 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. |
கல்முனைப் பிரதேச மக்களே!
இது மூன்று வருடங்களுக்கு முன்.......
கல்முனை நகரஅபிவிருத்தி
அமைச்சர் ஹக்கீம் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று 13 ஆம் திகதி(2015.09.13) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளபுதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் கல்முனை புதியநகர அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திணைக்களத் தலைவர்கள்மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது முன்வைக்கப்பட்ட சிலபிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சின் உயர் அதிகாரிகள்கல்முனைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களானஎம்.ஐ.எம்.மன்சூர், அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனைபிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மாநகர சபைஉறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதேச செயலாளர்கள்உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
2015.09.13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் படம் இப்படியும் ஒரு தகவல் கல்முனைப் பிரதேச மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. |
0 comments:
Post a Comment