31 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக பெற்றுள்ள
லங்கா சதொச நிறுவனம்

கடந்தவருடம் 31 பில்லியன் ரூபாவை லங்கா சதொச நிறுவனம் மொத்த வருமானமாக பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு 2 இல் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் www.lankasathosa.org  என்ற புதிய இணையத்தளமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2016 உடன் ஒப்பிடுகையில் இதுவரை 15 சதவீத வளர்ச்சியுடன் இந்த வலைப்பின்னல் மிக உயர்ந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
லங்கா சதொச நிறுவனம் புதிய இணையவழி பரிவர்த்தனையூடாக மின்-வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த இணையத்தளத்திலிருந்து இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த புதிய அணுகுமுறை விற்பனைக்கு பெரும் பங்காற்றும். நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதொச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது 5000 ஊழியர்களுடன் 398 விற்பனை நிலையங்களை கொண்டுள்ள லங்கா சதொச மற்றைய நுகர்வோர் பகுதிகளை அடைய அதன் வலைப்பின்னல் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு மெகா அங்காடிகளை அறிமுகப்படுத்த தயாராகவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில லங்கா சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top