இலங்கையில்  50,134 முஸ்லிம்கள்
அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர்
புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிப்பு

மொத்த அரச பணியாளர்களில் இது 4.2 சதவீதமாகும்


இலங்கையில்  2016 நவம்பர் 17ஆம் திகதிய நிலவரப்படி 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.     இவர்களில் 29,004பேர் ஆண்கள் 21,130 பேர் பெண்கள் என தொகை மதிப்பு புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 4.2 சதவீதமாகும்.
இது போன்று 123,727 தமிழர்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 12.4 சதவீதமாகும்.
இதேவேளை, 929,272 சிங்களவர்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 82.9 சதவீதமாகும்.
இது தொடர்பான  இறுதி அறிக்கை தற்போது தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
Distribution of employees by sector of employment, ethnicity and sex 2016
இனம்
ஆண்
பெண்
மொத்தம்
வீதம்
சிங்களவர்
516,649
412,623
929,272
82.9%
இலங்கைத் தமிழர்
55051
52970
108,021
10.6%
இந்தியத் தமிழர்
6613
9093
15706
1.8%
இலங்கை சோனகர்
29004
21130
50134
4.2%
பறங்கியர்
516
365
881
0.01%
மலாயர்
604
394
998
0.01%
ஏனையோர்
3011
1452
4463
0.3%
மொத்தம்
611,448
498,027
1,109,475
100


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top