ஏறாவூர்
பிரதேச சுகாதாரத்திற்குப் பொறுப்பான
அதிகாரிகளின்
கவனத்திற்கு
கல்முனை, அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு வழியாக கொழும்பு செல்லும் தனியார்
மற்றும்
CTB பஸ்கள் இரவு நேர
சாப்பாட்டுக்காக ஏறாவூரில் நிறுத்தப்படுகின்றன.
ஒரே நேரத்தில் 10க்கு மேற்பட்ட பஸ்கள் ஏறாவூரில் உள்ள அந்த சாப்பாட்டுக் கடையில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்படும் இந்த ஹோட்டலில் ஆண்களுக்கென 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அவை 3க்கும் வெளிச்சம் வரும் வகையில் டியூப் லைட்
ஒன்றை போடுவதற்கு கூட இவர்களால் முடியவில்லை. கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு பலநாற்களாகின்றன. அத்துடன் அசிங்கமாகவும்
காணப்படுகின்றது.
அந்த ஹோட்டலில் மேசைகளை துடைத்த கையோடு உணவுப் பரிமாற்றம் நடைபெறுகின்றது
தூரப்பிரயாணங்களுக்காக அடையாளம் காணப்பட்ட ஹோட்டல்கள் உள்ளன
இவற்றின் விலை நிர்ணயம் உணவுத்தரம் சுத்தம் சம்பந்தமாக துறைசார் அதிகாரிகள் தொடர்
கவனம் செலுத்தினால் இவ்வாறான நிலமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஏறாவூரிலுள்ள சுகாதாரத்திற்குப் பொறுப்பான துறைசார் அதிகாரிகள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள்
வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment