அமெரிக்க டொலர்களை கடத்த முயன்றவர்கள் கைது
அமெரிக்க
டொலர்களை, சட்டவிரோதமான
முறையில் இந்தியாவுக்கு
கொண்டுச் செல்வதற்கு
முயன்ற இருவர்,
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்
சுங்க அதிகாரிகளினால்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சீனா
மற்றும் நேபாளம்
ஆகிய நாடுகளைச்
சேர்ந்த இருவரே,
இன்று (17) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று 17 ஆம் திகதி அதிகாலை 5.40 மணியளவில் இந்தியாவிலுள்ள முப்பாய்
நோக்கிச் செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்க்ச் சென்றுள்ளனர்.
அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப்பை மற்றும் அணிந்து வந்த ஆடை ஆடைகளில் 169,900
அமேரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அதன்
பெறுமதி, 2 கோடியே 75 இலட்சத்துக்கு 24 ஆயிரம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment