ஹம்பாந்தோட்டை மேயருக்கு
5 வருட சிறைத்தண்டனை
சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றம்
வழங்கிய அதிரடி தீர்ப்பு..!
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை ஹம்பாந்தோட்டையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தாம் கைவசம் வைத்திருந்த துப்பாக்கி போலியானது எனவும், விளையாட்டு துப்பாக்கி எனவும் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும், ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவிற்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இதற்கமைய இன்றைய தினம் அவருக்க 5 வருட சிறைத்தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment