ஊடகங்களில் உலாவும் கோத்தாவின்
மற்றொரு குடியுரிமை ரத்து சான்றிதழ்
கோத்தாபய
ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது
தொடர்பான சான்றிதழ்
என, மற்றொரு
ஆவணம் ஊடகங்களில்
கசிய விடப்பட்டுள்ளது.
கோத்தாபய
ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச்
செய்யப்பட்டு அளிக்கப்பட்ட சான்றிதழ் என்று ஒரு ஆவணத்தை
மௌபிம சிங்கள
இதழ், வெளியிட்டுள்ளது.
முன்னதாக,
கோத்தாபய ராஜபக்சவின்
அமெரிக்க
குடியுரிமை ரத்துச் செய்யப்பட்ட
சான்றிதழ் என மோசடி ஆவணம்
ஒன்று உலாவ
விடப்பட்டது.
அது
போலியானது எனக்
கூறியிருந்த கோத்தாபய ராஜபக்ச, தன்னிடம் உண்மையான
ஆவணம் இருப்பதாகவும்
அதனை பகிரங்கமாக
ஊடகங்களுக்கு வெளியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
தேர்தல்
ஆணையம் கேட்டால்
மாத்திரமே அந்த
ஆவணத்தை சமர்ப்பிப்பேன்
என்று அவர்
கூறியிருந்த நிலையில், அவரது உண்மையான அமெரிக்க
குடியுரிமை நீக்க ஆவணம் என மற்றொரு
ஆவணம் உலாவ
விடப்பட்டுள்ளது.
எனினும்,
இது உண்மையான
ஆவணமா என்பதை
கோத்தாபய ராஜபக்ச
இன்னமும் உறுதி
செய்யவில்லை.
0 comments:
Post a Comment