மர்மமான முறையில் உயிரிழந்தவரின்
உருகுலைந்த சடலம் மீட்பு
திருகோணமலை
கந்தளாய் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் ஒருவர்
உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று
(15) வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய
தகவலின் அடிப்படையில்
சடலம் இனங்காணப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயது
மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய்
பேராற்றுவெளி பகுதியிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், சடலம் இனம் காண முடியாத
அளவுக்கு உருக்குழைந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம்
மூன்று நாட்களுக்கு
முன்னர் உயிரிழந்து
இருக்கலாம் எனவும் ஆற்றோர பற்றைக் காட்டுக்குள்
சடலம் காணப்படுவதால்
ஆணா பெண்ணா
என இனங்காண
முடியாத அளவுக்கு
உருக் குழைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு
உயிரினங்கள் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு இது கொலையா
அல்லது தற்கொலை
என்ற கோணத்தில்
பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment