கல்முனை
புதிய நகர அபிவிருத்தி
திட்டத்திற்கு
என்ன நடந்துவிட்டது
பிரதமரின்
வாக்குறுதியும் காற்றில் கலந்துவிட்டதா?
மக்கள்
கேள்வி
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் எனத் தெரிவித்து 4 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதி அதாவது முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்
தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் மரணித்த 15 ஆண்டு
தினமான செப்டெம்பர் 16 ஆம் திகதிக்கு மூன்று தினத்திற்கு முன்னர்
(2015.09.13) உயர்மட்டக்
கூட்டம் ஒன்று கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடத்தப்பட்டது.
கல்முனை அபிவிருத்தி தொடர்பாகஉயர்மட்டக் கூட்டம்
நடத்தப்பட்டு இன்று 13 ஆம் திகதியுடன்
சரியாக 4 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில்
கல்முனையில் குறிப்பிட்டு பேசக்கூடிய எந்த
அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என கல்முனை பிரதேச மக்கள் ஏக்கம் கொண்டுள்ளதுடன் இப்பிரதேச மக்கள்
அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகின்றார்களா என்றும் வினவுகின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலின்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி
திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் இப்பிரதேச மக்களுக்கு உறுதி
வழங்கியிருந்தார். பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இதற்கு பின்னின்று
செயல்படும் நிலையில் எமது அரசியல்வாதிகள் இல்லை எனவும் இங்குள்ள மக்களால் கவலை
தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,
நீர் வழங்கல் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற 4 வருடங்களுக்கு முன்னரான இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால்
தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில்(
திரையில் படமாகப் போட்டு காட்டப்பட்டது) விரிவாக ஆராயப்பட்டது.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் பொறியியலாளர் ரமேஷ்
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள் குறித்து
தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துகளை
முன்வைத்தனர். இந்நிகழ்வில் munnaaL பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்
ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர
சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர முன்னாள் ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட
மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் உயர்
அதிகாரிகளும் பிரதேச செயலாளர்கள் உட்பட
திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
தெரிவித்துள்ளோம்
தீர்மானிப்பது பிரதேச மக்களாகைய நீங்களே!
0 comments:
Post a Comment