சிங்கள செய்தி இணையத்தில் வைரலாகும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறு வயது கதை
பிரதமர்
ரணில் கொழும்பு
றோயல் கல்லூரியில்
பயிலும்போது இப்போது வசிக்கும் ( 5th
lane )ஐந்தாம் இலக்க ஒழுங்கையில் தான் அவர் வசித்தார்.
பாடசாலை
கிட்டிய தூரத்தில்
இருந்தாலும் அவர் பாடசாலைக்கு காரில் தான்
செல்வார்.
நடந்து
வரும் தூரத்தில்
இருக்கும் இவர்
காரில் வருகிறாரே
என்று நினைத்த
சில மாணவர்கள்
இவருக்கு ஒரு
பாடம் கற்பிக்கவேண்டுமென
நினைத்து காரின்
ரயரை வெட்டிவிட்டனர்.
ஆனால்
மறுநாள் அந்த
காரின் ரயரை
சரி செய்து
மீண்டும் அதே
காரில் பாடசாலை
வந்தார். மீண்டும்
ரயரை வெட்டினர்
மாணவர்கள்.. இரண்டாவது நாளும் வீட்டுக்கு சென்று
ரயரை மாற்றி
மறுநாள் பாடசாலை
வந்தார் ரணில்...
இப்படியே
பத்து நாட்கள்
காரின் ரயர்
சேதமாக்கப்பட்டது.ஆனால் ஒரு வார்த்தை கூறாமல்
மூச்சுக் காட்டாமல்
பாடசாலை வந்து
சென்றார் ரணில்..
11 ஆம் நாள்
யாரும் ரயரை
சேதப்படுத்தவில்லை...
அதன்
பின்னர் பல
தசாப்தங்கள் கடந்து இன்று ரணில் அதே
சவாலை எதிர்கொள்கிறாராம். இதேபோன்று அவர் சிக்கல்கலை முறியடித்து வருவதாக அந்த ஊடகம்
செய்தி வெளியிட்டுள்ளது.
(சிரித்துக்கொண்டிருப்பது
ரணில் )
0 comments:
Post a Comment