இந்திய மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உடல்
:
2 மணியளவில் இறுதிச்
சடங்கு
டில்லியில்
இடம்பெற்ற கார்
விபத்தில் மரணம்
அடைந்த இந்திய
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின்
உடல், இறுதி
சடங்குக்காக அவரது சொந்த ஊரான பர்லிக்குக்
கொண்டு செல்லப்பட்டதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பர்லியில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் இறுதிச் சடங்கில், ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் மகாராஷ்டிர மாநிலம் பர்லியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பாஜக தொண்டர்கள் முண்டியடித்ததால் அங்கு காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா, இறுதிச் சடங்கை அமைதியாக நடத்த தொண்டர்கள் உதவுமாறும், அமைதியாக இருக்குமாறும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டதை அடுத்து அங்கு அமைதி நிலவியது
0 comments:
Post a Comment