முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் ஒன்பது மாத பச்சிளம் குழந்தையைக் கூட
விடவில்லை:
நான் என்ன பாவம் செய்தேன்?
என்னை ஏன் தாக்கினீர்கள்?
[M.I.MUBARAK-JOURNALIST]
1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்துக்கு
அடுத்தபடியாக இந்நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான
கலவரம்தான் ஜூன் 2014 கலவரம்|. பொதுபல சேனாவின்
திட்டத்துக்கு அமைவாக அந்த அமைப்பின் தூண்டுதலால்
முன்னெடுக்கப்பட்ட இந்தக் கலவரத்தால்
சிதைக்கப்பட்ட அளுத்கம, தர்ஹாநகர் மற்றும் பேருவளை
ஆகிய பகுதி
முஸ்லிம்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும்
என்பது நிச்சயம்.
பெரும்பான்மை
இன மக்களுடன்
முஸ்லிம்கள் நல்லுறவுடன் வாழ்ந்ததைத் தவிர வேறு
எந்தக் குற்றத்தையும்
அந்த முஸ்லிம்கள்
செய்யவில்லை. இனிமேலும் இவர்களுடன் ஒற்றுமையாக வாழமுடியுமா
என்று முஸ்லிம்கள்
சிந்திக்கும் அளவுக்கு பேரினவாதிகளால் முஸ்லிம்கள் சிதைக்கப்பட்டுள்ளனர்.
நினைத்துப்பார்க்க முடியாத வேதனையை
அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்களை
கருவிலேயே கிள்ளி
வீசிவிடும் நோக்கில் பேரினவாதிகள் செயற்பட்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் தாக்குதல் தொடுத்த
விதத்தில் இருந்து
புரிந்துகொள்ள முடிகின்றது.
பாடசாலை
மாணவர்களின் புத்தகங்கள், பாதணிகள், சீருடைகள் எனக்
கல்வியுடன் தொடர்புபட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவர் மீதும்
தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் கல்வி,
பொருளாதாரம், சனத்தொகை உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்களை
கீழ் மட்டத்துக்குக் கொண்டு வருவதுதான்.
அதிலும்
சனத்தொகையை அழிக்கும் நோக்கில் அடுத்த தலைமுறையை
இப்போதே கிள்ளி
வீசும் நோக்கில்
பேரினவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் மிகக் கொடுமையானவை.
பச்சிளம்
குழந்தைகளைக் குறிவைத்து அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள்
அவர்களின் கொடூர
முகங்களையும், அடுத்த தலைமுறையை அடியோடு அழித்துவிடுவதற்கான
சதித்திட்டத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எத்தனையோ
சிறுவர்கள் இன்று அத்தாக்குதல்களால் காயங்களுடன் அவதிப்படுகின்றனர்.
கைக்குழந்தைகள் கூட அவர்களின் தாக்குதல்களில் இருந்து
தப்பவில்லை. அவ்வாறான தாக்குதல்களுள் ஒன்றுதான் தர்ஹாநகரைச்
சேர்ந்த ஒன்பது
மாதக் குழந்தை
மீது தொடுக்கப்பட்ட
தாக்குதல்.
தர்ஹா
நகரைச் சேர்ந்த
இந்தக் குழந்தையின்
உறவினர் ஒருவர்
வெலிப்பன்னையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்
கலவரத்தின் இரண்டாம் நாளான 16ஆம் திகதி
வெலிப்பன்னைக்குச் சென்று மரணச்சடங்குகளில்
கலந்துகொள்வதற்கு ஆயத்தமாகினர். கலவரம் உக்கிரமடைந்திருந்ததால் அவர்கள ; களுத்துறை மாவட்ட ஐ.தே.க. எம்.பி.
பாலித தெவரபெருமவின்
உதவியைக் கோரினர்.
தெவரபெரும
உதவ முன்வந்தார்.
அவர்களைத் தனது
வேனில் ஏற்றிக்கொண்டு
வெலிப்பன்னை சென்று மரணச்சடங்குகள் முடிந்த பின்னர்
மீண்டும் பாதுகாப்பாக
அழைத்து வந்தார்.சீனவத்தையில் வைத்து
பேரினவாதிகள் வாகனத்தை மறித்து இதில் முஸ்லிம்கள்
உள்ளனரா என்று
விசாரித்தனர். எம்.பியோ இல்லை என்று
மறுத்துவிட்டார். ஆனால், பேரினவாதிகள் உள்ளே முஸ்லிம்கள்
இருந்ததை அறிந்துவிட்டனர்.
சரமாரியாகத் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர்.
அவர்களைக்
காப்பாற்றுவதற்காக தெவரபெரும எம்.பி. உயிரைக்
கொடுத்துப் போராடினார். ஆனால், பேரினவாதிகள் அவரையும்
விட்டுவைக்கவில்லை. அவரை நிலத்தில்
தள்ளிவிட்டு அவர்மீது ஏறி நின்று அவரைத்
தாக்கினர்.
ஏனையவர்கள்
வேனில் இருந்த
முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது தன்
கையில் இருந்த
தனது குழந்தையைப்
பாதுகாப்பதற்காகப் போராடினார் அந்தத்
தாய். ஆனால்,
காடையர்களோ ஈவிரக்கமின்றி அக்குழந்தையையும்
தாக்கத் தொடங்கினர்.
அந்தத்
தாக்குதலில் குழந்தையின் தலையில் பலத்த காயமேற்பட்டது.
உடல் எங்கும்
சிவந்துபோனது. ஒன்பதுமாதக் குழந்தையால் எப்படி அந்த
வலியைத் தாங்கமுடியும்?
கொழும்பு வைத்தியசாலையில்
சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் அந்தக்
குழந்தை இப்போதும்
வலியால் துடித்துக்கொண்டிருப்பதைப்
பார்க்கும் ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்றனர். இப்படியானதொரு
காட்டுமிராண்டிக் கூட்டத்தோடா நாம் சகோதரர்களாகப் பழகினோம்
என்று அவர்களையே
கேள்வி கேட்கின்றனர்.
இந்தப்
பச்சிளங் குழந்தை
வேதனையால் துடித்து
அழும்போதெல்லாம் நான் உங்களுக்கு என்ன பாவம்
செய்தேன்? என்னை
ஏன் தாக்குகின்றீர்கள்?
நீங்கள் மனிதரா?
மிருகங்களா? என்று கேட்பதுபோல் இருக்கின்றது.
மனிதர்களை
வேட்டையாடும் கொடிய மிருகங்களுக்குத்தான்
பெரியவர், சிறியவர்
என்ற வித்தியாசம்
தெரிவதில்லை. இருந்தும், எத்தனையோ கொடிய மிருகங்கள்
கூட குழந்தைகளைக்
காப்பாற்றியிருக்கின்ற சம்பவங்களை நாம்
அறிவோம்.
அந்தக்
கொடிய மிருகங்களுக்கு
இருக்கின்ற இரக்க குணம்கூட இந்த மனித
மிருகங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இப்படியான மிருகங்களுடன்
நாம் தொடர்ந்தும்
எப்படி உறவாடுவது?
இனி எப்படி
இவர்களை நம்புவது?
எங்களின் எதிர்காலப்
பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? என்ல்லாம் கேள்விகளைத்
தொடுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்.
பச்சிளம்
குழந்தைகளைக்கூட கொலை செய்வதற்கு முயலும் அளவுக்கு
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான
சக்திகள் துணிந்துவிட்டன.
முஸ்லிம்களுக்கான
பாதுகாப்பு அறவே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரும் பேரினவாதிகளுக்குத்
துணைபோவதை அவதானிக்கக்
கூடியதாகவுள்ளது. எமது அரசியல்வாதிகள் குறிப்பாக, அரசில்
ஒட்டியிருக்கும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் இத்தாக்குதல் தொடர்ந்துகொண்டே
இருக்கும்....
இந்தப்
பச்சிளம் குழந்தை
மிக விரைவில்
குணமடைய வேண்டுமென்று
நாம் அனைவரும்
பிரார்த்திக்க வேண்டும். இந்தக் கொடிய மிருகங்களின்
சதித்திட்டங்களை அல்லாஹ் தவிடுபொடியாக்குவானாக!
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மிக விரைவில்
கட்டியெழுப்புவதற்கான ஆற்றலை அல்லாஹ்
எம் அனைவருக்கும்
கொடுப்பானாக! முஸ்லிம்களின் பொருளாதாரத்தை
நசுக்கி முஸ்லிம்களைக்
கொன்று குவிக்கத்
துடிக்கும் பேரினவாதிகளின் சதித்திட்டங்களை
அல்லாஹ் அவர்களின்
பக்கமே திருப்பிவிடுவானாக!
நன்றி: சுடர் ஒளி [
ARTICLE PUBLISHED IN SUDAR OLI ON 22-06-2014
0 comments:
Post a Comment