கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.திசாநாயக்கா ஆளுநரால் நியமனம்

தமிழ் மொழி பேசும் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம்செய்யப்படாததுகுறித்து 

ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.திசாநாயக்கா மாகாண ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கள்கிழமை ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகக் கடமையாற்றும் இவர் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளராகக் கடமையாற்றி திருக்கோணமலை அரச அதிபராக நியமனம் பெற்றுள்ள என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் இடத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ் மொழி பேசும் இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்யுமாறு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு ஆசிரியர் தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்நியமனம் இடம்பெற்றுள்ளது. இந்நியமனம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் அதிருப்திகளை வெளியிட்டுள்ளன.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top