தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
பணியிலிருந்து ஓய்வு

தேர்தல்கள் ஆணையாளர் ஹிந்த தேசப்பிரிய கடந்த சனிக்கிழமை முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  1955.06.06 பிறந்த இவர் கடந்த சனிக்கிழமை 60 வயதைப் பூர்த்தி செய்ததால்  அவர் அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

 எனினும் 19 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டத்தின்படி தேர்தல்கள் ஆணைக்குழு அமைக்கப்படும் வரை அவர் தற்காலிகமாகத்  தனது பணியில் நீடித்திருப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளார் எனவும் அது தொடர்பில் ஜனாதிபதியின் அனுமதிக் கடிதம் இன்னும் ஓரிரு தினங்களில் அவருக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top