237 ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு
அமைச்சரவை அனுமதி

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.    இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது.    இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top