சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கமும்
வழங்கப்படாத ஆவணங்களும்-

மருதூர் தேடல்

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை உருவாக்கும் பொருட்டு பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அவர்களால் சமர்பிக்கும் படி கூறிய ஆவணங்கள்:-
1) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக,
பிரதேச செயலாளரின் சிபார்சுடன் கூடிய உள்ளூராட்சி சபை உருவாக்க கோரிக்கைப் பத்திரம்,
2) கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம்,
3) கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் சம்மதக் கடிதம்.
இவ்வாறு சமர்ப்பிக்க கூறிய ஆவணங்களில் உள்ளூராட்சி சபை உருவாக்க கோரிக்கை பத்திரம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம் சலீம் அவர்கள் மூலமாக விரைவாக பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது.
ஏனைய இரண்டு ஆவணங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக்குப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர்,கல்முனை மாநகர மேயர் ஆகியோரால் வழங்கப்பட வேண்டிய ஆவணங்களாகும்.
இரண்டாவது ஆவணம் கல்முனை மாநகரசபையினால் வழங்கப்படும் என ஹகீம் உறுதி வழங்கியிருந்தார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மூன்றாவது ஆவனம் கிடைக்க ஹரீஸ் எம்.பீ உறுதி வழங்கியிருந்தார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதை பற்றி பேசக்கூட மு.காங்கிரஸ் தலைவர் சாய்ந்தமருது பெரிய பள்ளி நிருவாகத்துக்கு இதுவரை சந்தர்ப்பம் வழங்காமல் உள்ளார்.
இது பற்றி மு.காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களின் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


1 comments:

  1. ஸ்ரீலங்கா முஸ்லிம்
    காங்கிரஸ் கட்சி....! 
    மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வருகிறது. மீண்டும் எமக்கு பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்க தயாராகிறார்கள்.  பொன்னையன் றவூப் ஹக்கீம் கடந்த காலத்தில் எமது   நகரத்தை அரசியல் அநாதையாக்கியதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளான்.

    இந்த மானம் கெட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவன்  இருந்த காலத்தில் எமது  நகரத்தை ஏமாற்றி, சீரழித்து சின்னாபின்னமாக்கியதில் இந்த ஹக்கீமுடைய கயவர் கூட்டமே முழுக்க காரணம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மரணித்து விட்டதாகவே எமது  சாய்ந்தமருது வாழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள், புரிந்து கொண்டுள்ளார்கள்.

    எனவே இந்த முறை மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி எமது மக்களை ஏமாற்றிடலாம் என்று முஸ்லிம் காங்கிரஸ் மனப்பால் குடிக்க வேண்டாம். எமது நகரத்தில் இவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தி தான் என்ன? எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எல்லாம் ஸீரோ.... !

    ஆகவே ஒட்டு மொத்த சாய்ந்தமருது வாழ் மக்கள் விழிப்புடன் இருந்து சரியான பாடம் புகட்டுவோம்.....!

    நாரொ தக்பீர்         நாரொ தக்பீர்
    நாரொ தக்பீர்......!
    அல்லாஹூ அக்பர்

    "சாய்ந்தமருதான்"
         (2015.07.04)



    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top