ஐ. தே. கட்சி வேட்பாளர்களாக திகாமடுல்ல மாவட்டத்தில்

நான்கு முஸ்லிம்கள் முதன்மை?


நடைபெறவிருக்கும்  நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே தேர்தலில் குதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தேர்தலில் இணைந்து களமிறங்கும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்த வேண்டியிருப்பதால் தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்படுவதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எம். ஏ. மஜீத், நற்பிட்டிமுனையை சேர்ந்தவரும் கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ஏ.எம்.ஏ.நபார், சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஸனலி, சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி  ரஸ்ஸாக் ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு பேசப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
கல்முனைத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் இருப்பதால் பெரும்பாலும் இருவரில் ஒருவரே வேட்பாளர் பட்டியலில் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

இது தவிர இத் தேர்தல் மாவட்டத்தில் இன்னும் பல புது முகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும் இதற்கென இவர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top