எதிர்க்கட்சி தலைவர்
ஆர்.சம்பந்தனுக்கு
முன்னாள் அமைச்சர் மன்சூர் வாழ்த்து
எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் மன்சூர் தெரிவித்துள்ளதாவது,
எனது அன்புக்குரிய சம்பந்தன் அவர்களுக்கு,
தயவு செய்து எனது வாழ்த்துச் செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். தங்களுக்கு இந்த உயர்ந்த பதவி கிடைத்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆண்டவன் உங்களுக்கு நல்லருள்பாலிப்பானாக. இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் மன்சூர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment