சவூதி அரேபியாவில் தற்கொலைப்படை
தாக்குதலில்
தொடர்புடைய 19 பேர் கைது
சவூதி
அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த
வாரம் சவூதி
அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே
தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து
தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஜித்தாவில் அமெரிக்க
தூதரகத்தை குறிவைத்து
தாக்குதல் நடத்திய
பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சவூதி
அரேபியா அடையாளம்
கண்டுபிடித்துள்ளது.
மேலும்,
மதினா மசூதி
அருகே நடத்தப்பட்ட
தற்கொலைப்படை தாக்குதலில் காவலர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து,
12 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட 19 பயங்கரவாதிகளை
போலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக மதினாவில்
தற்கொலை படை
தாக்குதல் நடத்திய
26 வயது மதிக்கத்தக்க
சவூதி அரேபியாவை
சேர்ந்த ஒருவரையும்
போலிஸார் கைது
செய்துள்ளதாக சவூதி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment