இன்று இராணுவ முகாமிற்கு முன்னால்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை!
கொஸ்கம, சாலாவ பகுதியில் இராணுவ முகாமிற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நஷ்டஈடு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து , அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி வழியான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இவ்வாறு ஏனைய மக்களுக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சப்ரகமுவ பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதிலும், ஏனைய மக்களுக்கு இடையூறு விளைவிக்க இவர்களுக்கு உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாலாவ சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்ட போதிலும், பலருக்கு குறித்த நிதி கிடைக்கவில்லை என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment