வங்கதேசத்தில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
4 பேர் உயிரிழப்பு 12 பேர் படுகாயம்
வங்கதேசத்தின் கிஷோரிகஞ்ச் பகுதியில் ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏராளமானோர் ஒன்று கூடிய பிரம்மாண்ட தொழுகை நடைபெற்றது. அப்போது சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொழுகை நடைபெற்ற இடத்தின் நுழைவு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்குள் கையெறி பெட்ரோல் குண்டு வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தவில்லை, உள்ளூர் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் தான் நடத்தி உள்ளனர் என வங்கதேச அமைச்சர் ஒருவர் கூறி இருந்தார். அவர் கருத்து கூறிய சிறிது நேரத்திலேயே, தொழுகை நடந்த அரங்கிற்குள் பயங்கரவாதி மறைந்திருந்து, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 6-7 பேர் நடத்தியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். தொழுகையில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தாக்குதல் நடத்தியவர்கள், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 7 நாட்களில் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட 2வது தாக்குதல் இதுவாகும். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இஸ்லாம் மத தலைவரை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment