துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
7 பேர் மரணம் 8 பேர் காயம்

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.
துருக்கியின் எல்லைப்பகுதியில் பாதுகாக்கும் பாதுகாப்பு படைவீரர்களை சந்தித்து ரமழான் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக லெப்டினண்ட்  ஜெனரல், கர்னல் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ராணுவத்திற்கு சொந்தமான எஸ்-70 ஹெலிகாப்டரில் சென்றனர்இந்த ஹெலிகாப்டர் வடகிழக்கு பகுதியில் உள்ள கிரேசன் மாகாணத்தின் கருங்கடல் அருகே திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 7 பேர் பலியானதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியதாக துருக்கி பிரதமர் பினாலி மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top