குழந்தை தவழ ஆரம்பித்ததும்
பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை


உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது. குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய அடிபட வாய்ப்புள்ளது. எனவே சில விதிகளை மனதில் கொண்டு நடந்தால், குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகள் தவழும்போது மறக்காமல் அதை புகைப்படம் பிடித்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது முக்கியமானது. குறிப்பாக தினமும் தவறாமல் வீட்டுத் தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் குழந்தை தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த ஒரு நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் ஒரளவு பாதுகாப்பாக இருக்கும்.
தவழும் குழந்தையை எப்போதும் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தனியாக விடக்கூடாது. அப்படிவிட்டால், எவ்வளவு தான் தலையணையை அவர்களைச் சுற்றி வைத்தாலும், அவர்கள் அதனை தாண்டி விழுந்துவிடுவார்கள்.
உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல வண்ணமயமான பொருளை அவர்களின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அவர்களை எடுக்கச் சொல்லுங்கள். இதனால் அவர்கள் குதூகலத்துடன் சந்தோஷமாக தவழ்வார்கள்.

குழந்தை தவழ ஆரம்பித்தால் அவர்கள் நடப்பதற்கு பயிற்சி கொடுங்கள், இதனால் அவர்கள் விரைவில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top