வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய

உன்னத வாழ்வுகவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு

வெலிப்பன்னை அத்தாஸ் எழுதியஉன்னத வாழ்வுகவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. 3.00 மணிக்கு, மது/ வெலிப்பன்னை ரஹ்மானிய்யா  யூஸூப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும்.
 வெலிப்பன்னை மது/ ரஹ்மானிய்யா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் வெலிப்பன்னை படிப்பு வட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்விழாவில்தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமை வகிப்பதோடு, மத்துகம பிரதேச செயலாளர் அலுவலக கலாசார உத்தியோகத்தர், அனுஷா ஜயசிங்க சிறப்பு அதியாக கலந்து கொள்கிறார். மற்றும் நூலின் முதற் பிரதியை நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய பணிப்பாளர், பொருளாளர் டாக்டர் ஹுஸ்னா நஜீப் பெற்றுக் கொள்கிறார்.
விழாவின் விசேட அதிதிகளாக, இலக்கியமணி . இக்பால், மேமன் கவி, வதிரி சி. இரவீந்திரன், வலம்புரி கவிதா வட்ட பொதுச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பேருவளை நபவிய்யா கல்வி நிலைய அதிபர் .எச்.எம். முபாரக் ஆகியோர் கலந்து கொள்வர்.
நிகழ்வுகளாக, கிராத் - மௌலவி எம்.ஆர்.எம். ஸிபான்(முஸ்தபவி), வரவேற்புரை - வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலய அதிபர் எம்.வை. கவுஸுல் அமீர், தலைமையுரை - தமிழ்த் தென்றல் அலி அக்பர், நூல் அறிமுகவுரை - வலம்புரி கவிதா வட்டத் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன், சிறப்புக்கவிதை - பல்கலை வேந்தன்காவ்யாபிமானிகலைவாதி கலீல், நூல் மீளாய்வு - இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் எஸ். ஜெயகுமார், நன்றியுரை - படிப்பு வட்டச் செயலாளர் எஸ்.எச்.எம். இல்யாஸ் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பை - கிண்ணியா அமீர் அலியும் நிகழ்த்தவுள்ளனர்.
இவ்விழாவில், இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளதால் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்பாய் அழைக்கின்றனர்.
இது நூலாசிரியரின் 6ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

(மருதூர் மகன், எம்.எஸ்.எம்.சாஹிர்)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top