மாகாண சபை உறுப்பினர் பதிவியிலிருந்தும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும்
ஆரிப் சம்சுதீன் நீக்கம்
கடந்த
2012ஆம் ஆண்டு
நடைபெற்ற கிழக்கு
மாகாண சபைத்
தேர்தலில் ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக
போட்டியிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாண
சபையிலிருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
அங்கத்துவத்திலிருந்தும் கடந்த 13ஆம்
திகதி புதன்கிழமையிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்
சுதந்தர முன்னணியின்
பொதுச் செயலாளரும்,
மீன்பிடி அமைச்சருமான
மஹிந்த அமரவீர
கிழக்கு மாகாண
சபைக்கு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்
சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின்
செயலாளர் தேர்தல்
ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தர்
ஆணையாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த
தேர்தல் காலத்தில் ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணிக்கும், தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இடையில்
மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
அடிப்படையில், தற்போது வெற்றிடமாகவுள்ள ஆரிப் சம்சுடீனின்
இடத்திற்கு தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு
தோல்வியுற்ற தொழிலதிபர் ஜமால்டீன் முகம்மட் சுபையிர்
கிழக்கு மாகாண
சபை உறுப்பினராக
நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment