ஒலுவில் மக்களின் கரையோர நிலங்கள்
கடலால் உள்வாங்கப்படும் பரிதாப நிலை
அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒலுவில் மக்களின் கரையோரப் பிரதேச நிலங்கள் வேகமாக கடலால் உள்வாங்கப்படும் பரிதாப நிலை காணப்படுகின்றது.
ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் ஒரு வீதி அழகான முறையில் அமைக்கப்படு இருந்தது. வெளியூர் மக்கள் விடுமுறை தினங்களிலும் பெருநாள் காலங்களிலும் குடும்பம் குடும்பமாக அதிக எண்ணிக்கையில் அந்த இடத்திற்கு சென்று அமைதியாக தமது பொழுதைக் கழித்துவிட்டு வருவார்கள். தற்போது அந்த இடங்கள் கடலோடு கடலாக உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் போட்டி போட்டு ஒலுவில் மக்களின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டு வாக்குறுதிகளை வழங்குவதும், கடலரிப்பைத் தடுப்பதற்கு செய்யப்போகும் திட்டங்கள் பற்றி வாய்ச்சாடலாகக் கூறிக் கொள்வதுமாக செயல்படாமல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள இம்மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றினைந்து ஒலுவில் மக்களின் கரையோரப் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.
0 comments:
Post a Comment