சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமானார்

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி ( Abdul Sattar Edhi ) காலமானார். பாக்.,கிற்கு வழிதவறி சென்ற இந்தியப் பெண் கீதாவை, அவரது அமைப்பு தான் பாதுகாத்து வந்தது.

கடந்த சில வாரங்களாக மூச்சுத் திணறல், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி (88), கராச்சி மருத்துவமனையில் காலமானார். எதி என்ற பெயரில் சமூக சேவை அறக்கட்டளை பாகிஸ்தானில் நடத்தி வந்த இவரது அமைப்பு தான், பாக்.,கிற்கு வழிதவறி சென்ற இந்தியப் பெண் கீதாவை பாதுகாத்து வந்தது. கீதாவை பராமரித்ததற்காக, பிரதமர் மோடி அறிவித்த ரூ.1 கோடி நிதியை வாங்க எதி அறக்கட்டளை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top