டாக்கா தாக்குதல் ஸாகிர் நாயிக் ஐ விசாரணை செய்யுமாறு
மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவு
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் மும்பை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த முதலாம் திகதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயிக் இன் உரைகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.
அதில் ஸாகிர் நாயிக் வன்முறை தூண்டும் விதமாக உரையாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவரது உரைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு பங்களாதேஷ் அரசு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏற்கனவே ஸாகிர் நாயிக்கிற்கும் அவரது அமைப்பிற்கும் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டாக்காவில் நடந்த தாக்குதலை கண்டித்தும், ஜாகிர் நாயிக்கிற்கு எதிராக மும்பை, நாக்பாடாவில் போராட்டம் நடந்துவருகிறது.
தற்போது ஸாகிர் நாயிக் மக்கா சென்றுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி மும்பை திரும்ப உள்ளார். இந்நிலையில் ஸாகிர் நாயிக் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பை பொலிஸ் கமிஷ்னருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment