சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்
ஐ.எம்.முகைதீன் வபாத்தானார்
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்ஐ.எம்.முகைதீன் அவர்கள் 83 வயதில் காலமானார் .
தலைமைத்துவப் பண்புகள்,சீரான நிருவாகம், விடா முயர்சி, சுறுசுறுப்பு, ஆளுமை,
ஆற்றல்,திறன்,வழிகாட்டல், நம்பகத் தன்மை பொன்ற பண்புகள் ஒருங்கே அமையப்
பெற்றவர்தான் ஐ.எம்.முகைதீன் அவர்கள்.
இவர் முகைதீன்பாவா இப்றாலெப்பை (ராசா வட்ட விதானை) உமறுலெப்பை பாத்தும்மா
தம்பதிகளின் மூத்த புதல்வராக 1933-12-01 ஆம் திகதி சாய்ந்தமருது 6 ஆம்
குறிச்சியில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை காரைதீவு இராம கிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக்
கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியிலும்
கற்று 1955 ஆம் ஆண்டு S.S.C பரீட்சையில்
சித்தியடைந்தார்.
1956-02-09 இல் அலியார் பரிகாரி
முத்தலிபு வைத்தியர்
– அகமதுலெப்பை உதுமானாச்சி தம்பதிகளின் 4வது புதல்வி கதிஜா உம்மா (சுல்பிகா ரீச்சர்)
ஆசிரியை திருமணம் செய்து கொண்டார்.1956-09-01 இல்
அம்பாறை ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் ஆளணி முகாமையாளராக
சேவையாற்றினார்.
1987 இல் எம்பிலிபிட்டியில் சேவை செய்து ஓய்வு பெற்ற இவர் அரசியல்வாதிகளுடன்
நெருங்கிப் பழகி சாய்ந்தமருதின் முன்னேற்றத்திற்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு
பெரும் பாடுபட்டார். இப்பிரதேசங்களில் இனப்பிரச்சினை எழும்போது தீர்வுகளைக் காண
முனைப்புடன் செயல்பட்ட மனிதர்.
இணக்க சபைத் தலைவராக இருந்து மேல் மட்டங்களுடன் மூன்று மொழிகளிலும் தொடர்புகளை
ஏற்படுத்தி ஊர் மக்களின் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து பாராட்டுக்களைப்
பெற்றவர்.
சாய்ந்தமருதுடன் பொலிவேரியன்
கிராமத்தை இணைக்கும் பாலத்தை அமைப்பதில் முன்னாள் வர்த்தக், வாணிபத்துறை அமைச்சர்
ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இவர் தலைவராக இருந்த காலத்தில்தான்
2003-12-26 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவனது கருணையைக் கொண்டு அவனது உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸில் அஃலாவைக் கொடுக்க பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

0 comments:
Post a Comment