டாக்டர் ஜாகிர் நாயக்கின் செய்தியாளார் சந்திப்பு
மூன்றாவது முறையாக ரத்து

அதிகாரிகளின் அழுத்தம் காரணம் எனத் தெரிவிப்பு



டாக்டர் ஜாகிர் நாயக்கின் செய்தியாளார் சந்திப்பு மூன்றாவது முறையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்தின் உரிமையாளர், செய்தியாளர் சந்திப்பை நடத்த அனுமதிக்காதது காரணமாக கூறப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பை நடத்த மும்பையில் உள்ள ஹோட்டல்கள் அனுமதிக்க கூடாது என ஹோட்டல்கள் நிர்வாகிகளை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதியில் இருந்து இந்தியா திரும்பியதும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து விளக்கம் அளிக்க போவதாக டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்திருந்தார். ஆனால் ஆப்ரிக்கா சுற்று பயணம் இருப்பதால் ஸ்கைப் வழியாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கபோவதாக அறிவித்தார்.
ஆனால் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமல் அந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்கைப் மூலம் நடைபெற இருந்த செய்தியாளர் சந்திப்பும் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்தின் உரிமையாளர், செய்தியாளர் சந்திப்பை நடத்த அனுமதிக்காதது காரணமாக கூறப்படுகிறது. மேலும் செய்தியாளர் சந்திப்பை நடத்த மும்பையில் உள்ள ஹோட்டல்கள் அனுமதிக்க கூடாது என ஹோட்டல்கள் நிர்வாகிகளை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் ஜாகிர் நாயக்யை உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் டாக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் மும்பையை சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தான். டாக்டர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து தற்போது வூதியில் இருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top