ராஸி முஹம்மத் வபாத்தானார்

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் அப்துல் லத்தீப் ராஸி முஹம்மத் (வயது 30) திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
சாய்ந்தமருதைச் சேர்ந்த இவர் மக்கள் வங்கியில் கடமை புரிந்த மர்ஹும் ஏ.எம்.ஏ.லத்தீப் அல் ஹிலால் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உதவி அதிபருமான  ஹுஸைமா லத்தீப் ஆகியோர்களின் அன்பு புதல்வரும், கல்முனை ஸாஹிறா கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஹம்ஸா அவர்களின் மருமகனுமாவார்.
நேற்றிரவு வபாத்தான ராஸி முகம்மதின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து இல. 30, ஒபேசேகரபுர, ராஜகிர வில் உள்ள டாக்டர் உவைசின் இல்லத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றது.

ன்ஷா அல்லாஹ் இன்று(19) அஷர் தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

அன்னாரின் பிரிவினால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் அளித்து அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவாயாக...ஆமின்










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top